தங்கமுலாம் பூசப்பட்ட நகைகளை அடமானம் வைத்து வங்கியில் நகைக்கடன் - ரூ.22 லட்சம் வரை மோசடி!

தங்கமுலாம் பூசப்பட்ட நகைகளை அடமானம் வைத்து வங்கியில் நகைக்கடன் - ரூ.22 லட்சம் வரை மோசடி!
தங்கமுலாம் பூசப்பட்ட நகைகளை அடமானம் வைத்து வங்கியில் நகைக்கடன் - ரூ.22 லட்சம் வரை மோசடி!
Published on

சென்னையில் தங்கமுலாம் பூசப்பட்ட நகைகளை வங்கியில் அடமானம் வைத்து ரூ.22 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், நகை மதிப்பீட்டாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை என்எஸ்சி போஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ஹர்சல் சிவாஜி (33), இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு 332 கிராம் தங்க நகைகளை, தம்புசெட்டி தெருவில் உள்ள ஐடிபிஐ வங்கியில் அடமானம் வைத்து ரூ.22 லட்சம் பணத்தை கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக நகைக்கு வட்டி கட்டாமலும் நகையை மீட்காததாலும் கடந்த நவம்பர் மாதம் நகைகளை ஏலம் விடுவதற்காக வங்கி அதிகாரிகள் நகைகளை சோதனை செய்துள்ளனர்.

அப்போது அவை தங்க முலாம் பூசப்பட்ட போலியான நகைகள் என்பது தெரியவந்தது.. இதனை அடுத்து எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் வங்கி அதிகாரிகள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அப்போது இந்நபர் ஏற்கனவே இதேபோல மணப்புரம் கோல்டு லோனில் போலி தங்க நகைகளை வைத்து ரூ.18 லட்சம் வரை பெற்று மோசடி செய்த வழக்கில் கைதானவர் என்பவர் தெரியவந்துள்ளது. இவரின் பெயர், சிவாஜி ஹைர்சல்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து வங்கியின் நகை மதிப்பீட்டாளரான ஹைரிபிரசாத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com