குடியாத்தத்தில் அடகு கடை நடத்தி வருபவர் வீட்டின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரொக்கம், 30 சவரன் தங்கநகை, மற்றும் 1கிலோ வெள்ளிநகை திருட்டு. அடகு கடைகாரர் வீட்டில் இல்லாததை அறிந்து அதே பகுதியைச் சேர்ந்தவர் கைவரிசை காட்டியது விசாரணையில் அம்பலம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஜெய் இந்திராநகர் வீரசிவாஜி தெருவில் வசிப்பவர் விஜயகுமார். நகை வேலை செய்யும் இவர் வீட்டிலேயே அடகு கடை நடித்திவருகிறார். இந்நிலையில் விஜயகுமார் தனது குடும்பத்துடன் 2 நாட்கள் வேலூரில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இன்று காலை திரும்பி வீட்டிற்குவந்து பார்த்தபோது, தனது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தவர். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 95 ஆயிரம் ரொக்கப்பணம், 30 சவரன் தங்கநகைகள், மற்றும் ஒருகிலோ வெள்ளி பொருட்களை அடையாளம் தெரியாத நபர்களால் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்து விஜயகுமார் குடியாத்தம் நகர காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், கைரேகை நிபுணர்களின் உதவியுடன் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அடகுகடை உரிமையாளர் விஜயகுமார் 2 நாள் வேலூருக்கு சென்றிருந்த நிலையில் இதை அறிந்த அதே தெருவை சேர்ந்த அருண்குமார் என்ற நபர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் திருடியதை ஒப்புக்கொண்டார். அவரிடம் இருந்து திருடப்பட்ட நகைகள், மற்றம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்