கடந்த 10 வருடங்களில் மனைவியால் 7 முறை சிறை சென்ற கணவன். 7 முறையும் மனைவியே தனது கணவனை ஜாமீன் எடுத்த சம்பவம் ஒன்று குஜராத் மாவட்டத்தில் நடைபெற்றது.
குஜராத் - அகமதாபாத் - காடியை சேர்ந்த பிரேம்சந்த் மாலிக்கும் மெக்சானாவைச் சேர்ந்த சோனுமாலிக்கும் 2001ல் திருமணம் நடந்ததுள்ளது. தம்பதிகளான இருவரும் காடி பகுதியில் மகிழ்சியாக வசித்து வந்த நிலையில் 2014 ஆண்டு முதல் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது.
இதில் 2015ல் தம்பதி இருவருக்குள்ளும் ஏற்பட்ட தகறாறில், சோனு அளித்த புகாரின் அடிப்படையில் குடும்ப வன்முறை வழக்கில் போலிசார் பிரேம் சந்த் மாலிக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தம்பதி இருவரும் பிரிந்தனர். சோனுவிற்கு ஜீவனாம்சமாக மாதம் ரூபாய் 2000 வழங்க நீதிமன்றமானது பிரேம் சந்திற்கு உத்தரவிட்டது.
தினசரி ஊதியம் பெரும் பிரேம் சந்தால் ஜீவனாம்சத்தை சரியாக சோனுவுக்கு தரமுடியவில்லை. இதனால் பிரேம்சந்த் மாலிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டடு அவர் கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்கள் சிறையில் இருந்த நிலையில், பிரேம்சந்த் மீது பரிதாபம் கொண்ட அவரது மனைவியான சோனு நீதிமன்றத்தில் தன் கணவருக்கு உத்திரவாதம் அளித்து அவரை ஜாமீனில் எடுத்திருக்கிறார். பின்னர் தம்பதிகள் இருவரும் ஒரே வீட்டில் வாக்கு வாதங்களுடனே தங்களது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில், அடுத்து வந்த இரண்டு வருடங்களில் தனது கணவன் தன்னை கொடுமைப்படுத்துவதாக சோனு போலிஸில் புகார் அளிப்பதும் , புகாரின் அடிப்படையில் போலிசார் பிரேம் சந்தை கைது செய்வதும், கைது செய்த இரண்டு மாதங்களில் சோனு தன் கணவரை தானே சென்று ஜாமீனில் வெளியே எடுப்பதும் என்று “அவனுடன் வாழமுடியாது, அவனில்லாமலும் வாழமுடியாது” என்கின்ற ரீதியில் பிரேம்சந்திற்கு எதிராக 7 முறை போலிஸில் புகார் அளித்து சிறையில் அடைத்துள்ளார். 2019-2020 ல் சோனுவிற்கு ஜீவனாம்சம் தர தவறிய வழக்கில் மறுபடி பிரேம் சந்தை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
கணவன் சிறைக்கு சென்று இரண்டு வருடங்கள் ஆன நிலையில் மறுபடி பிரேம்சந்த் மீது அனுதாபம் கொண்ட சோனு 2023 ஜூலை 4ம் தேதி அவரை ஜாமீனில் எடுத்து வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார். வீட்டிற்கு வந்த மறுநாள் அதாவது ஜூலை 5ம் தேதி பிரேம்சந்த் தனது பணப்பையையும் தனது கைபேசியையும் எங்கோ தவறுதலாக தொலைத்து விட்டிருக்கிறார். இது தம்பதி இருவருக்குள்ளும் மறுபடி பிரச்சனை வர காரணமாக இருந்திருக்கிறது. இவர்கள் இருவரின் பிரச்சனையில் அவர்களது 20 வயது மகனும் தனது தாய் சோனுவுடன் இணைந்துக்கொண்டு தந்தையை தாக்கி இருக்கிறார்.
மறுபடியும் போலீஸ் ஸ்டேஷன் சென்ற சோனு தனது கணவன் தனது கண்களில் மிளகாய் பொடியை தூவி தன்னை துன்புறுத்தியதாக பிரேச் சந்ந்திற்கு எதிராக போலீஸில் எஃப் ஐஆர் பதிவு செய்துள்ளார்.
இச்சம்பவத்தால் விரக்தி அடைந்த பிரேம்சந்த் வீட்டை விட்டு வெளியேறி பாதானில் உள்ள தனது தாயாருடன் தங்கியுள்ளார்.