சென்னை: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - 12 மணிநேரத்தில் 9 பேர் கைது

சென்னை: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் - 12 மணிநேரத்தில் 9 பேர் கைது
சென்னை: ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்  - 12 மணிநேரத்தில் 9 பேர் கைது
Published on
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் விவகாரத்தில் 12 மணி நேரத்தில் கடத்தல்காரர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரை கடத்தி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
குன்றத்தூர் அடுத்த கோவூர், ராயல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(48). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று இவருக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்வதாக ஆன்லைனில் விளம்பரம் செய்திருந்தார். இந்நிலையில் வீட்டை வாங்குவதற்கு கணவன், மனைவி இரண்டு பேர் முன் தொகை கொடுக்கவந்து பேசி கொண்டிருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட கும்பல் சுரஷ்குமாரை தாக்கி கை, கால்களை கட்டி காரில் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ்குமார், போரூர் உதவி கமிஷனர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோன், இன்ஸ்பெக்டர் ராஜி, சப்-இன்ஸ்பெக்டர் குமரன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைத்து, சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் எண்களை ஆய்வு செய்தனர்.
அப்போது சுரேஷ்குமாரை காரில் கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் சுரேஷ் குமாரை கத்தி, இரும்பு ராடு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்து மிரட்டி கடத்திச்செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. மேலும் அந்த வீட்டில் இருந்து சொகுசு காரில் ஒரு ஆணும், பெண்ணும் தனியாக செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. இதையடுத்து அந்த கார்களின் பதிவு எண்களை கொண்டு காரின் உரிமையாளர்கள் யார் என்று விசாரித்தபோது சொகுசு காரில் வந்த நபர் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தை சேர்ந்த ராஜராஜன் அவரது மனைவி என்பது தெரியவந்தது.
இதையடுத்து ராஜராஜனை பிடித்து விசாரித்தபோது சிதம்பரத்தை சேர்ந்த முத்துசாமி என்பவர் கூறியதன் பேரில் வீட்டை வாங்குவதுபோல் வந்து சிவகுமாரை கடத்தியதாக தெரிவித்தார். இதையடுத்து சேலம் ஆத்தூரில் கடத்தி வைக்கப்பட்டிருந்த சுரேஷ்குமாரை தனிப்படை போலீசார் இன்று மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்டதாக முத்துசாமி(39), ராஜராஜன்(52), ராவிராஜன்(31), அரவிந்த்ராஜ்(32), அரவிந்தன்(27), பாபு(40), மனிகண்டன்(25), பிச்சமுத்து(51), ராஜசேகர்(35), உள்ளிட்ட 9 பேரை கைது செய்துள்ளனர். கடத்தல் சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே துப்பு துலக்கி துரிதமாக செயல்பட்டு கடத்தல்காரர்களை கண்டுபிடித்து 12 மணி நேரத்தில் கடத்தப்பட்டவரை மீட்ட காவல்துறை குழுவினருக்கு ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com