ஓமலூர் அருகேயுள்ள பூசாரிப்பட்டி கூட்டுறவு வங்கியில் 80 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி நடைபெற்றது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பூசாரிப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியின் செயலாளர் வள்ளியண்ணன் திடீரென தலைமறைவானதை அடுத்து, வங்கியில் முறைகேடு நடந்திருக்கலாம் என மக்கள் புகார் கூறினர். அதனையடுத்து, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் தமிழ்நங்கை தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். ஒருவாரமாக நடைபெற்ற ஆய்வில் நகை கடனை மீட்க உறுப்பினர்கள் செலுத்திய தொகையை வங்கி கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
80 லட்சம் ரூபாய்க்கு மேல் கையாடல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டதால் வங்கியின் செயலாளர் வள்ளியண்ணனின் சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராஜேந்திரபிரசாத் கூறினார்.