டன் கணக்கில் கேரளாவிற்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி!

டன் கணக்கில் கேரளாவிற்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி!
டன் கணக்கில் கேரளாவிற்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி!
Published on

கன்னியாகுமரி வழியாக கேரளாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். 

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அடிக்கடி ரேஷன் அரிசி மற்றும் மண்ணெண்ணை கேரளாவுக்கு கடத்தும் சம்பவங்கள் அரங்கேறி
வருகின்றன. குறைவான விலையில் மலிவாக கிடைப்பதால் இவற்றை சிலர் கேரளாவிற்கு கடத்தி சென்று அதிக விலைக்கு
விற்கின்றனர். இதை தடுப்பதற்கு காவல்துறை, வருவாய்துறை போன்றவை தனிப்படை அமைத்து செயல்பட்டாலும், கடத்தல்
சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. 

இந்நிலையில் இன்று காலை தக்கலை - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனத்தை தக்கலை
போலீசார் தடுத்து நிறுத்தியபோது, வாகனத்தை நிறுத்தி விட்டு ஓட்டுனர் ஓட்டம் பிடித்தார். பின்னர் போலீசார் அந்த வாகனத்தை
சோதனையிட்டபோது, சுமார் 100 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. அவற்றின் எடை சுமார் 5 டன் என
கூறப்படுகிறது. இதையடுத்து அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், அவற்றை காவல் நிலையத்திற்கு
கொண்டு சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com