விழுப்புரம்: கடன் தொல்லையால் 3 குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை

விழுப்புரம்: கடன் தொல்லையால் 3 குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை
விழுப்புரம்: கடன் தொல்லையால் 3 குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை
Published on

விழுப்புரம் அருகே கடன்தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே வளவனூர் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். தச்சு வேலை செய்து வந்தார். இவர் மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார்.

இதனிடையே கொரோனா காலக்கட்டத்தில் இவருக்கு வேலையில்லாத சூழல் நிலவி வந்ததால் தொடர்ந்து கடன்வாங்கி பிழைப்பு நடத்தி வந்துள்ளார். இதையடுத்து வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத சூழல் நிலவி வந்ததாக கூறப்படுகிறது. கடனை திருப்பி தர இயலாததால் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சந்தேக மரணமாக பதிவு செய்த போலீசார் கடன் கொடுத்தவர்கள் பட்டியல் யாருக்காவது தெரிந்தால் தகவல் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். போலீசார் விசாரணையில் ஸ்ரீராம் நிறுவனத்தில் கூட மோகன் கடன் பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com