சிறுமியைக் கடத்தி திருமணம்: போக்சோ வழக்கில் இளைஞருக்கு 41 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமியைக் கடத்தி திருமணம்: போக்சோ வழக்கில் இளைஞருக்கு 41 ஆண்டுகள் சிறைத் தண்டனை
சிறுமியைக் கடத்தி திருமணம்: போக்சோ வழக்கில் இளைஞருக்கு 41 ஆண்டுகள் சிறைத் தண்டனை
Published on

சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து சித்ரவதை செய்த நபருக்கு 41 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த கருணாகரன் என்பவர், 2015 ஆம் ஆண்டு 16 வயது சிறுமியைக் கடத்திச்சென்று திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். பின்னர் மதுபோதையில் அடித்து உதைத்தும் உடலில் சூடு வைத்தும் சித்ரவதை செய்ததோடு, பாலியல் வன்கொடுமையும் இழைத்துள்ளார். சிறுமியின் தாய் அளித்த புகாரில் கருணாகரன் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதி ராஜலட்சுமி, கருணாகரன் மீதான 6 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அனைத்து குற்றங்களுக்கும் சேர்த்து மொத்தம் 41 ஆண்டுகள் சிறை தண்டனையும், 36 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக அனுபவிக்கவும், அனைத்து தண்டனைகளையும் அனுபவித்த பின் கடைசியாக ஆயுள் தண்டனையையும் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக தமிழ்நாடு அரசு 7 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com