ஸ்ரீபெரும்புதூர்: போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சி – 4 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சித்த நான்கு பேரை மணிமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர்.
accused
accusedpt desk
Published on

கோயம்புத்தூரைச் சேர்ந்தவர் சுதாகர். இவருக்கு காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் வரதராஜபுரம் ஊராட்சியில் 1.37 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. இந்நிலையில் சிலர் போலி ஆவணங்கள் தயார் செய்து தன் நிலத்தை அபகரிக்க முயல்வதாக சுதாகர் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

arrested
arrestedpt desk

இந்த புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். அப்போது சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் சுதாகரின் 1.37 ஏக்கர் நிலத்திற்கான அசல் ஆவணங்கள் தொலைந்து விட்டது போல் நாடகமாடி, அதனை தன் பெயருக்கு பவர் பத்திரம் மூலம் போலியாக பதிவு செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து போலி ஆவணங்கள் தயார் செய்து நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த பெருங்களத்தூரைச் சேர்ந்த செந்தில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அவரது கூட்டாளிகள் ஹரிகிருஷ்ணன், ஆனந்தன், விஜய் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com