வேலை வாங்கித்தருவதாகக்கூறி பொதுமக்களிடம் பணம் பறித்த புகாரின் அடிப்படையில் 58 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 30 மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அரசுப்பணிகள், வங்கி, ரயில்வே உள்ளிட்ட துறைகளில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி இவர்கள் பொதுமக்களை ஏமாற்றி பலர் பணம் பெற்றுள்ளனர். இதில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியனின் உதவியாளர் சேஷாத்ரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியின் மூன்றாவது மனைவி ராணி எலிசபெத் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செல்வாக்கு இருப்பதாகக்கூறி ஏமாற்றிய ஹரிநாத், தலைமைச்செயலக ஊழியர் கண்ணன் என்பவரும் அடங்குவர். இந்த மோசடி நபர்களில் 12 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.
நேற்று கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றப்பட்டன.