ஜெட் ஏர்வெஸ் விமானத்தில், 3 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலரை அலுமினிய காகிதத்தில் மறைத்து வைத்து கடத்த முயன்ற விமான பணிப் பெண் கைது செய்யப்பட்டார்.
ஜெட் ஏர்வெஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில், விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருபவர் தேவ்ஷீ குல்ஸ்ரீஸ்தா. இவர், நேற்று காலை, டெல்லியில் இருந்து, ஹாங்காங் செல்ல இருந்த ஜெட் ஏர்வெஸ் விமானத்தில் 3.2 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலரை அலுமினிய காகிதத்தில் வைத்து வெளிநாட்டிற்கு கடத்த முயன்றுள்ளார். கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் ஹவாலா பணப் பரிமாற்ற ஏஜென்சிக்கு உதவும் வகையில், இந்தப் பெண் இத்தகைய செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஹாங்காங் புறப்படும் விமானம் ஒன்றில் கோடிக்கணக்கில் பணம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலில் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்ட அவர்கள், ஜெட் ஏர்வெஸ் நிறுவனத்தை சேர்ந்த விமானப்பணி, 3.2 கோடி ரூபாய் அமெரிக்க டாலர், மறைமுகமாக அலுமினிய காகிதத்தில் மடித்து கடத்தி சென்றதை கண்டுப்பிடித்துள்ளனர். மேலும், இது போல் கடந்த 2 மாதங்களில், பலமுறை விமான பணிப் பெண்ணான தேவ்ஷீ பல கோடி மதிப்பிலான கறுப்பு பணத்தை யாருக்கும் தெரியாமல் விமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு சென்றதையும் வருவாய் புலனாய்வு துறையினர் கண்டுப்பிடித்துள்ளனர். அதேபோல் இந்தப் பெண்ணுடன் கூட்டணி வைத்திருந்த ஹவாலா ஏஜென்சியாக பணியாற்றி வந்த அமித் மல்கோத்ராவையும் அதிகாரிகள் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரின் வீட்டிலிருந்து இதுவரை கணக்கில் வராத 1600 டாலர் மற்றும் 3 லட்ச ரூபாய் ஆகியவை கைப்பற்றபட்டுள்ளது.