சென்னை: ரயில் பயணிகளிடம் நகைகளை திருடிய புகாரில் மூவர் கைது

ரயிலில் பயணம் செய்பவர்களிடம் நகைகளை திருடியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 22 சவரன் நகைகளை மீட்டனர்.
accused
accusedpt desk
Published on

சென்னை பெருங்குடி, திருவள்ளுவர் நகர் எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா சுரேஷ் (25). இவர் கடந்த ஏப்ரல் மாதம், 12ஆம் தேதி பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது குடும்பத்துடன் மதுரையில் இருந்து தாம்பரம் வரை பயணம் செய்துள்ளார். அப்போது அவர் பையில் வைத்திருந்த 19 சவரன் தங்க நகை மற்றும் லேப்டாப் திருடுபோயுள்ளது.

accused with police
accused with policept desk

இது குறித்து அவர் தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணையில் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (38) என்பவர்தான் நகைகளுடன் சேர்த்து லேப்டாப் பையை திருடினார் என்று கண்டுபிடித்துள்ளனர். இதற்கு உடைந்தையாக இருந்த ராயபுரம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (34) என்பவரையும் கைது செய்து விசாரணை நடத்தி 19 சவரன் நகைகளை மீட்டனர் காவல்துறையினர்.

முன்னதாக கடந்த மார்ச் 9 ஆம் தேதி மன்னை எக்ஸ்பிரஸில் பயணித்த ஒருவர், தனது மூன்று சவரன் நகை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டுபோயிருப்பதாக எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் குறிப்பிடப்பட்ட 3 சவரன் நகையையும் வெங்கடேசன் என்பவரின் வீட்டில் தங்கக் கட்டியாக காவல்துறையினர் கைப்பற்றினர். இதையடுத்து மொத்தம் 22 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com