சேலம்: யானை தந்தங்களை விற்க முயன்றதாக 3 பேர் கைது – ஐந்து பேர் தப்பியோட்டம்

சேலம் மேட்டூர் அருகே யானை தந்தம் விற்க முயன்றதாக மூன்று பேரை கைது செய்த வனத்துறையினர் தப்பியோடிய ஐந்து பேரை தேடிவருகின்றனர்.
Accused
Accusedpt desk
Published on

செய்தியாளர்: பாலகிருஷ்ணன்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே மேச்சேரி, தெத்திகிரிபட்டியில் யானை தந்தங்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மேட்டூர் வனத்துறை அலுவலகத்திற்கு தமிழ்நாடு வன குற்றத் தடுப்பு பிரிவினர் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் மேட்டூர் வனச்சரகர் சிவானந்தம் தலைமையிலான குழுவினர் மற்றும் சேலம் வனக் கோட்ட மாவட்ட வன அலுவலர் கலாநிதி அறிவுறுத்தலின்படி தனிப்படை குழுவினர் அதிரடியாக சோதனையில் இறங்கினர்.

இந்நிலையில், யானை தந்தங்களை பதுக்கி வைத்திருந்த நபர்களை தொடர்பு கொண்ட வனத் துறையினர், யானை தந்தங்களை வாங்குவதுபோல் பேசி வரவழைத்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர், மாறுவேடத்தில் சென்ற வனத் துறையினரை யானை தந்தங்களை மண்ணில் புதைத்து வைத்திருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மண்ணில் புதைத்து வைத்திருந்த தந்கங்களை வெளியே எடுத்தபோது, வனத்துறை மற்றும் தனிப்படையைச் சேர்ந்த வனத்துறையினர் சுற்றி வளைத்தனர்.

Accused
நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்

அப்போது 5 பேர் தப்பியோடிய நிலையில் சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த பாலு, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சேகர், சோமசுந்தரம், ஆகிய மூன்று பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து ஒரு ஜோடி யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர் படத்தில் சேலம் மத்திய சிறைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சரவணன், ராஜ்குமார், ராமர் ,சின்னையன் ,வெங்கடாசலம் ஆகிய ஐந்து பேரை வனத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com