பிரசாதம் எனக்கூறி மயக்க மருந்து கலந்த பானத்தை கொடுத்த மர்ம நபர்: பின்பு நடந்த அதிர்ச்சி

பிரசாதம் எனக்கூறி மயக்க மருந்து கலந்த பானத்தை கொடுத்த மர்ம நபர்: பின்பு நடந்த அதிர்ச்சி
பிரசாதம் எனக்கூறி மயக்க மருந்து கலந்த பானத்தை கொடுத்த மர்ம நபர்: பின்பு நடந்த அதிர்ச்சி
Published on

கோயில் பிரசாதம் எனக்கூறி மயக்க மருந்து கலந்த பானத்தை கொடுத்த மர்ம நபரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் உள்ள முபாரிக்பூர் கிராமத்தில் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. இந்த கண்காட்சி அங்குள்ள கோயிலுக்கு அருகில் நடத்தப்பட்டதால் பக்தர்களும்  பொதுமக்களும் கண்காட்சியில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) அடையாளம் தெரியாத ஒரு நபர்  கோயில் பிரசாதம் என்று கூறி அங்குள்ளவர்களுக்கு குளிர்பானம் வழங்கியுள்ளார். இதை அருந்திய பலர் அரை மணி நேரத்திற்குப் பிறகு மயக்கமடைந்து விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து மயக்கமடைந்த  28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விசாரணையில் கோயில் பிரசாதம் என்று கூறி வழங்கப்பட்ட பானத்தில் மயக்க மருந்து கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "மக்களுக்கு குளிர்பானம் வழங்கிய நபர் யார் என்பது தெரியவில்லை. இச்சம்பவம் குறித்து எஃப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். கண்காட்சிக்கு வந்தவர்களின் உடமைகள் அப்படியே உள்ளன, எதுவும் திருடப்படவில்லை'' என்று கூறினர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர் மயக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை என்றும் எனினும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது எனவும்  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: அமைச்சர் மிரட்டுவதாக புகார் கூறிய அரசு ஒப்பந்ததரார் சடலமாக மீட்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com