நேபாளத்தில் ஆசிட் வீச்சு தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி, ஆசிட் விற்பனையை ஒழுங்குப்படுத்த பிறப்பித்த ஆணையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகமாக காணப்படுகிற குற்றங்களில் ஒன்று ஆசிட் வீச்சு. இதற்கு கடுமையான தண்டனையை விதிக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த கட்டளையைப் பிறப்பித்ததாக பண்டாரி தெரிவித்துள்ளார்.
எனவே இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிட் விற்பனை செய்வதற்கும், விநியோகிப்பதற்கும் உரிமம் பெறுவதிலும் புதிய விதிமுறையை ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .