பையை போட்டுவிட்டு தப்பிய நபர்.. சோதனையின்போது வெடித்த மர்ம பொருள்.. 2 காவலர்கள் படுகாயம்

பையை போட்டுவிட்டு தப்பிய நபர்.. சோதனையின்போது வெடித்த மர்ம பொருள்.. 2 காவலர்கள் படுகாயம்
பையை போட்டுவிட்டு தப்பிய நபர்.. சோதனையின்போது வெடித்த மர்ம பொருள்.. 2 காவலர்கள் படுகாயம்
Published on

அரக்கோணத்தில் மர்ம பொருள் வெடித்ததில் 2 காவலர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நகர காவல்துறை ஆய்வாளர் சீனிவாசனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சிறப்பு உதவி ஆய்வாளர் கணேசன், காவலர்கள் சந்தோஷ் மற்றும் ஏழுமலையுடன் தகவல் கிடைத்த பகுதியிலுள்ள ரியாஸ் அகமது என்பவரது வீட்டில் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளனர். ஆய்வுக்காக சென்ற காவலர்களுக்கு சம்பந்தப்பட்ட நபரின் வீடு தெரியாததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்ற நபரை அழைத்துக்கொண்டு ரியாஸின் வீட்டிற்குள் சென்றுள்ளனர். 

காவலர்களைக் கண்டவுடன் சம்பந்தப்பட்ட நபர் கையில் வைத்திருந்த பையை போட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார். சந்தோஷ் மற்றும் ஏழுமலை இருவரும் பையை சோதனை செய்தபோது அதிலிருந்த மர்ம பொருள் திடீரென வெடித்துள்ளது. இந்த வெடி விபத்தில் காயமடைந்த இருவரையும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபப்ட்டு, பிறகு இருவரையும் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர்.

தப்பியோடிய ரியாஸை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், பன்றிகளை பிடிப்பதற்காக மாங்கொட்டையின் உள்ளே வெடிபொருள் வைத்திருந்ததாகவும், அது வெடித்துதான் காவலர்களுக்கு விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் ரியாஸ் கூறியுள்ளதாகவும்  ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன்  தெரிவித்துள்ளார். மேலும் சம்பவ இடத்தில் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வுக்குப் பின்னர் வெடி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com