17 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய வாலிபர்!

17 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய வாலிபர்!
17 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய வாலிபர்!
Published on

நாகை அருகே 17 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் தெற்கு வெளி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரின் தந்தை மற்றும் தாய் இருவரும் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்தில் துப்புரவு பணியாளர்களாக வேலைப் பார்த்து வருகின்றனர். இதனால் அவர்கள் வேலைக்கு செல்லும்போது அதே பகுதியை சேர்ந்த இந்திரா என்ற முதியவரின் வீட்டில் தனது மகளை பாதுகாப்பிற்காக விட்டு செல்வது வழக்கம்.

இதைத்தொடர்ந்து கடந்த 20ம் தேதி சிறுமிக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சிறுமியின் தாயார் திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமியை சேர்த்துள்ளார். அங்கு சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்துள்ளனர்.

அப்போது நாகை மாவட்டம் திருமருகல் தெற்கு வெளி, ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் ராஜேஷ்(29) என்பவர் இந்திரா வீட்டிற்கு அடிக்கடி வருவதும். அங்கு சிறுமிக்கும் ராஜேஷுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்தது. அப்போது ராஜேஷ் வரும்போது குளிர்பானம் வாங்கி வந்து சிறுமிக்கு கொடுப்பதை வழக்கமாக செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் சிறுமிக்கு ராஜேஷ் குளிர்பானம் கொடுத்துள்ளார். அதில் சுயநினைவை இழந்த சிறுமியை அவருக்குத் தெரியாமலேயே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மயக்கம் தெளிந்த சிறுமி பாட்டியிடம் உடல் வலி அதிகமாக இருப்பதாக தெரிவித்ததாகவும், அதன்பின் அடிக்கடி இதுபோன்று நடைபெற்றதையும் பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தார். இதனையடுத்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com