உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் துபாயிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவரது உடமைகளை ஸ்கேன் செய்து பார்த்தபோது இரும்பு சுத்தியல் ஒன்றில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, சுத்தியலை உடைத்துப் பார்த்தபோது, இரும்பு சுத்தியலுக்குள் தங்கம் இருந்தது தெரிய வந்தது. சுங்கச் சட்டம் 1962-இன் கீழ் ரூ. 14.25 லட்சம் மதிப்பில் 341 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.