பேஸ்புக்கில் பழகி ’மார்பிங்’: சிரிக்க சிரிக்கப் பேசிய சிங்கப்பூர் தோழிக்கு வலை!

பேஸ்புக்கில் பழகி ’மார்பிங்’: சிரிக்க சிரிக்கப் பேசிய சிங்கப்பூர் தோழிக்கு வலை!
பேஸ்புக்கில் பழகி ’மார்பிங்’: சிரிக்க சிரிக்கப் பேசிய சிங்கப்பூர் தோழிக்கு வலை!
Published on

முன் பின் தெரியாதவர்களின் பேஸ்புக் நட்பால், பல பஞ்சாயத்துகள் பரபரப்பைக் கிளப்புவது சகஜமாகிவிட்டது. இளம் பெண்களின் பெயரையும் முகத்தையும் காட்டி மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் சிக்கி சின்னாபின்னமாகும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. என்னதான் விழிப்பாக இருந்தாலும் நன்றாக படித்தவர்களே, வழுக்கி விழுகிறார்கள் இந்தக் கும்பலிடம்.

அதற்கு இந்த சம்பவமும் ஓர் உதாரணம்.

ஐதராபாத்தில் உள்ள எல்.பி.நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துகொடுக்கும் வேலை செய்துவருகிறார். பேஸ்புக்கில் இவருக்கு கிறிஸ்டைன் லீ வெட்பேக்ஸ் என்ற இளம்பெண், ஃபிரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தார். அழகாக இருந்ததால் ஏற்றுக்கொண்டார் ஸ்ரீனி. பிறகு சாட்டிங்கில் வந்தார் அந்த இளம்பெண். சிங்கப்பூரில் வசிப்பதாகவும், பல் மருத்துவமனையில் பணிபுரிவதாகவும் சொன்னார். பேஸ்புக் மூலம் நிறைய நண்பர்களிடம் தொடர்பு வைத்துக்கொள்ள இருப்பதாகவும் சொன்னார். அதை உண்மை என்று நம்பி, பேசத் தொடங்கினார் ஸ்ரீனி. பிறகு இருவரும் புகைப்படங்களை பரிமாறிக்கொண்டனர். வீடியோ சாட்டிலும் சிரிக்க சிரிக்கப் பேசிக்கொண்டனர். கொஞ்சம் நட்பு பலமானதும் அடிக்கடி பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிலையில் திடீரென்று அவரது வாட்ஸ்-அப்புக்கு சில புகைப்படங்களும் வீடியோவும் வந்தது. அதில் ஸ்ரீனிவாஸ் ஆபாசப் படத்தில் இருப்பது போல இருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பயந்துவிட்டார். அடுத்த மெசேஜில், கேட்ட பணத்தைக் கொடுக்காவிட்டால், இந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களிலும் யுடியூப்பிலும் பதிவேற்றி விடு வோம் என்று மிரட்டல் வந்தது. பயந்து போன அவர், முதல் கட்டமாக அவர்கள் சொன்ன கணக்கில் ரூ.30 ஆயிரத்தைச் செலுத்தினார். பிறகு வீட்டில் ரொம்ப கவலையாக இருந்துள்ளார். பெற்றோர், ’ஏன் இப்படியிருக்கே. என்னாச்சு?’ என்று விசாரித்துள்ளனர். முதலில் ஒன்றும் சொல்லாமல் அமைதி காத்துவந்த அவர், ஒரு கட்டத்தில் எல்லாவற்றையும் விவரித்துள்ளார்.

இதையடுத்து ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் அவர் சொன்ன, சிங்கப்பூர் தோழியின் பேஸ்புக் அக்கவுண்டை தேடினால் அதை செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி மேலும் விசாரித்து வருகின்றனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com