ஒமைக்ரான் பற்றிய அச்சத்தால் தடுப்பூசி பதுக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய அந்த அமைப்பின் தடுப்பூசி துறைத் தலைவர் டாக்டர் கைத் ஓ பிரையன், ”கடந்த 2 மாதங்களாகத்தான் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி சீராக கிடைத்து வருகிறது. இப்படி அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும்.
ஆனால், ஒமைக்ரான் பற்றிய அச்சத்தால் தடுப்பூசி விநியோகம் மீண்டும் தடைபடுமோ என்ற அச்சம் மனதில் எழுகிறது. இந்தச் சூழலில் பணக்கார நாடுகள் தங்கள் தேவைக்கு மேற்பட்ட தடுப்பூசிகளை பதுக்கி வைக்கும் அபாயமும் உள்ளது. அப்படி நடந்தால் மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காமல் அங்கு பரவல் அதிகரித்து, உருமாறிய வைரஸ்கள் தீவிரமாக உருவாக வழிவகுக்கும்” என்று அவர் தெரிவித்தார்.