``கொரோனாவின் அடுத்த புதிய அலைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்க”- WHO சவுமியா சாமிநாதன்

``கொரோனாவின் அடுத்த புதிய அலைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்க”- WHO சவுமியா சாமிநாதன்
``கொரோனாவின் அடுத்த புதிய அலைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்க”- WHO சவுமியா சாமிநாதன்
Published on

கொரோனா புதிய அலைகளை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா கிருமிகள் வேகமாக பரவி வருவதாகவும், அவை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களையும் பாதிக்கிறது என்றும் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். புதிய வகை கொரோனாவால் அதிகமானோர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெரிய அளவில் மருத்துவ வசதிகள் தேவைப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அனைத்து நாடுகளும் நிலைமையை எதிர்கொள்ள உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில்தான் கொரோனா பரவல் அச்சம் அதிகரித்திருப்பதாக அமெர்க்காவின் வெள்ளை மாளிகை தனது மக்களை எச்சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது. போலவே ஐரோப்பிய கண்டங்களிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. ஆசியாவிலும்கூட, இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா அதிகரித்தபடி இருக்கிறது.

கொரோனா பரவல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள, பூஸ்டர் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நிபுணர்களும், அரசும் பரிந்துரை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com