வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்றுக்கு திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் சிகிச்சைப் பலனின்றி அண்மையில் உயிரிழந்தார். தமிழகத்தில், இதுவரை 15 எம்.எல்.ஏக்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
சில அதிமுக அமைச்சர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் வேலூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.