உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இன்ஸ்பெக்டர் இந்திரஜித் சிங் படௌரியா (47 வயது). 1989இல் கான்ஸ்டபிளாக போலீஸ் படையில் சேர்ந்த இவர் 2013இல் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கு உயர்த்தப்பட்டு ஒரு மாதத்திற்கு முன்புதான் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றார்.
ஜூலை 23 அன்று மீரட் மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் பயிற்சி பள்ளியில் ஒரு மீட்டிங்கில் கலந்துகொண்டு தான் பதவியில் இருக்கும் ஷாஜாஜ்பூர் மாவட்டத்திற்கு திரும்பினார். ஜூலை 23 மற்றும் 31க்கு இடைபட்ட காலத்தில் அவருக்கு இரண்டுமுறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் RAT என்ற விரைவான சோதனை எடுத்திருக்கிறார். அதில் நம்பகத் தன்மை குறைவானது என்றவுடன் பி.சி.ஆர் சோதனையையும் எடுத்திருக்கிறார். இரண்டிலும் நெகட்டிவ் என்றே வந்திருந்தது.
இருப்பினும் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் மோசமாகவே அவர் மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஆக்ஸ்ட் 5ஆம் தேதி உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் படௌரியாவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
உ.பியில் இதுவரை 1 லட்சம் பேருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவற்றில் 1,900 பேர் உயிரிழந்துள்ளனர். 43,000க்கும் மேற்பட்டவர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.