சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த இருவருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இருவரும் தனிமை படுத்தப்படுள்ளனர்.
சீனா தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை இலங்கையில் இருந்து 70 பயணிகளுடன் ஏர்லங்கா விமானம் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த விமானத்தில், சீனாவில் இருந்து இலங்கை வழியாக மதுரைக்கு வந்த பயணியிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அதில், பிரதீபா (39) மற்றும் அவரது 6 வயது மகள் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியில் தங்கியுள்ள பிரதீபா மற்றும் அவரது குழந்தை ஆகிய இருவரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் 15 நாட்கள் தனிமை படுத்தியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் கூடுதல் கண்காணிப்பு மற்றும் தீவிர பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இதையடுத்து விமானத்தில் வந்த 70 பயணிகளுக்கும் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம் என மதுரை மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தார்.