இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,39,53,475லிருந்து 3,39,71,607ஆக உயர்ந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று முன்தினம் 19,740, நேற்று 18,166 என பதிவான நிலையில் இன்று 18,132 பேருக்கு பாதிப்பு உறுதியாகியிருக்கிறது.
இந்தியாவில் ஒரேநாளில் 21,563 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,32,71,915லிருந்து 3,32,93,478ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் ஒரேநாளில் 193பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் இறந்தோர் எண்ணிக்கை 4,50,589லிருந்து 4,50,782ஆக உயர்ந்துள்ளது.
நாடுமுழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2,27,347பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியாவில் 95.19 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. ஒரேநாளில் 46,57,679 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5,19,43,998 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.