இந்த முறை இருப்பதைவிட அடுத்த தொற்றுநோய்க்கு உலகம் இன்னும் தயாராக இருக்கவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கூறியுள்ளார். மேலும் மக்களின் ஆரோக்யம் பற்றி விசாரிக்க உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவில் டிசம்பர் 2019-இல் கொரோனாத் தொற்று பரவ ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உலகளவில் 27.19 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,88,326 பேர் இறந்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதுபற்றி டெட்ராஸ் பேசுகையில், வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கையில் இது கடைசி தொற்றுநோய் அல்ல. இதற்கு முந்தையத் தொற்றுகள் நமக்கு நிறைய வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. ஆனால் அடுத்த தொற்று இன்னும் மோசமாக இருக்கும். அதற்கு உலகமே மேலும் தயாராக இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.