மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிராவிர் மாத்திரையை உட்கொண்டால் கொரோனா தொற்று பாதிப்பால் மரணம் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் கூடிய நிலை கூட பலருக்கு ஏற்படாது எனவும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவுகள் மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாகவும், இது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் அமெரிக்க மருத்துவத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் மெர்க் நிறுவனம் அமெரிக்காவில் இந்த மாத்திரையை அவசரகாலத்தில் பயன்படுத்த அனுமதி கோரி விண்ணபிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.