கொரோனாவை குணப்படுத்த இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி?

கொரோனாவை குணப்படுத்த இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி?
கொரோனாவை குணப்படுத்த இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி?
Published on

கொரோனாவை குணப்படுத்தும் வகையில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனெகா மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசியை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உருவாக்கியது. 

பல்வேறு சோதனைகளுக்கு பிறகு மனிதர்களின் உடலில் ஆக்ஸ்போர்டு உருவாக்கிய தடுப்பூசி செலுத்தப்பட்டதில் நல்லபடியான சோதனை முடிவுகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கபட்டது.

இதனையடுத்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியினை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் வகையில் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்துடன் இணைந்து புனேவில் இயங்கி  வரும் சீரம் இன்ஸ்டிட்யூட் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய ஒப்பந்தம் போட்டது. 

இருப்பினும் இந்த தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அரசின் அனுமதி அவசியம் என்பதால் தற்போது அரசுடன் இணைந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம் பரிசோதித்து வருகிறது. 

இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனையை ஆக்ஸ்போர்டு தடுப்பூசி எட்டியுள்ள நிலையில் நாடு முழுவதும் சுமார் பதினேழு இடங்களில் 1600 பேருக்கு பரிசோதனை செய்யப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்தியாவில் ஐ.சி.எம்.ஆருடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சைடஸ் காடிலாவின் Zycov D நிறுவனங்களின் தடுப்பு மருந்தின் பரிசோதனை முதலிரண்டு கட்டடங்களை மட்டுமே எட்டியுள்ளன. 

அதை வைத்து பார்க்கும் போது இந்தியாவில் கொரோனாவுக்காக எதிராக பயன்பட உள்ள முதல் தடுப்பூசியாக ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி இருக்கும் என எதிர்பார்ப்பதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com