தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
வருகிற 31ஆம் தேதியுடன் கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தொடர்புடைய விதிமுறைகள் முடிவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்தி உள்ளார். இந்நிகழ்வில் தலைமைச் செயலர், மருத்துவத் துறை செயலர், வருவாய் துறை செயலர் உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர். கொரோனா தடுப்பூசி போடாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்தவும், பூஸ்டர் டோஸ் மற்றும் 12 வயதுக்கு மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan @Subramanian_ma pic.twitter.com/aUjJidzZ3x
— TN DIPR (@TNDIPRNEWS) March 22, 2022

சீனா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோரை பரிசோதிக்கவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பான புதிய தளர்வுகள், விதிமுறைகள் ஏதேனும் இருந்தால், அரசு இன்று அதை அறிவிக்கும் எனத் தெரிகிறது.
சமீபத்திய செய்தி: கடந்த 2 ஆண்டுகளில் வனவிலங்குகள் தாக்கியதால் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர்?