கொரோனாவை எதிர்கொள்ள எதிர்ப்பு சக்தி அவசியம் - கடலில் 50 அடி ஆழத்தில் உடற்பயிற்சி

கொரோனாவை எதிர்கொள்ள எதிர்ப்பு சக்தி அவசியம் - கடலில் 50 அடி ஆழத்தில் உடற்பயிற்சி
கொரோனாவை எதிர்கொள்ள எதிர்ப்பு சக்தி அவசியம் - கடலில் 50 அடி ஆழத்தில் உடற்பயிற்சி
Published on

கொரோனாவை எதிர்கொள்வதற்கு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த ஆழ்கடலில் உடற்பயிற்சி செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் புதுச்சேரியை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த்.

புதுச்சேரி மற்றும் சென்னையில் டெம்பிள் அட்வென்சர் என்ற பெயரில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி மையத்தை நடத்தி வருபவர் அரவிந்த். இவர் அவ்வப்போது ஆழ்கடலில் நடைபெறும் அரிய நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுக்காத்துகொள்ள, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி எவ்வளவு அவசியமோ, அதேபோல் உடற்பயிற்சியும் அவசியம் என்பதை வலியுறுத்தி, அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கடலில் 50 அடி ஆழத்தில் சென்று உடற்பயிற்சி செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இவரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com