'ஓ’ பிரிவு ரத்தம் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று அபாயம் குறைவு என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
கனடா நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வில் ‘ஓ’ ரத்தப் பிரிவினர் குறைவாகவே கொரோனா தொற்றுக்கு ஆளாவதாகவும் இவர்களுடன் ஒப்பிடுகையில் A , B மற்றும் AB பிரிவினர் அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளதாக இங்கிலாந்து மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.
டென்மார்க் நாட்டில் 4 லட்சத்து 73 ஆயிரம் பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகளை கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஓ பிரிவு ரத்தம் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று வாய்ப்பு குறைவு என்றும் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் அவர்களின் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதும் குறைவாகவே இருப்பது தெரியவந்துள்ளதாகவும் அம்மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.
எனினும் ஓ பிரிவினர் பாதிக்கப்படுவது குறைவாக இருக்க காரணம் என்ன என்பது குறித்து விரிவான ஆய்வு தேவைப்படுவதாக அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.