கொரோனா வைரஸ்
மாநிலங்களிடம் 13.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் உள்ளன: மத்திய சுகாதாரத்துறை தகவல்
மாநிலங்களிடம் 13.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் உள்ளன: மத்திய சுகாதாரத்துறை தகவல்
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 13 கோடியே 76 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் தொகுப்பிலிருந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு இதுவரை 113 கோடியே 37 லட்சத்து 12 ஆயிரத்து 145 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் மொத்தமாக 106 கோடியே 85 லட்சத்து 71 ஆயிரத்து 879 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது மாநிலங்கள் வசம் 13 கோடியே 76 லட்சத்து 86 ஆயிரத்து 371 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருப்பு உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.