தமிழகத்தில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இந்த தடுப்பூசி முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெய்யாமொழி ஆகியோர் தொடங்கிவைத்தனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி, ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.