கொரோனா வார்டில் புகைபிடிப்பவர்களை கண்காணிக்க பிரத்யேக குழு - மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன்

கொரோனா வார்டில் புகைபிடிப்பவர்களை கண்காணிக்க பிரத்யேக குழு - மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன்
கொரோனா வார்டில் புகைபிடிப்பவர்களை கண்காணிக்க பிரத்யேக குழு - மதுரை ராஜாஜி மருத்துவமனை டீன்
Published on

கொரோனா வார்டு மற்றும் கழிப்பறையில் புகை பிடிப்பவர்களை கண்டறியக் குழு அமைக்கப்படும் என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி புதிய தலைமுறைக்கு பிரத்தியேகமாக பேட்டியளித்துள்ளார்.

கொரோனா நோயாளிகளுக்காக கழிப்பறைகளில் ஆக்ஸிஜன் வசதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு நோயாளிகள் சிலர் புகைப்பிடிப்பதாக எழுந்த புகார் குறித்து கேட்டதற்கு , நோயாளிகள் யாரும் புகை பிடிக்கின்றார்களா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட உள்ளது . அதேபோன்று புகைபிடிப்பது சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கும் , பிற நோயாளிகளுக்கும் உயிரிழப்பு ஏற்படுத்தும் ஆபத்தை உண்டாக்கும் என்பதால் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்களைக் கொண்டு கண்காணிக்கப்படும்.

கொரோனா காலகட்டத்திலும் பிற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் , 490 பேருக்கு இதுவரை டயாலிஸ் செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 51 பேருக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது என மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா தானம் குறித்து கொரோனா சிகிச்சை பெற்று சென்ற 2600 பேரிடம் மருத்துவமனை சார்பில் தொலைபேசியில் விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 19 பேர் பிளாஸ்மா தானம் செய்துள்ள நிலையில், 40க்கும் மேற்பட்டோர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வந்துள்ளனர். பிளாஸ்மா தானம் செய்ய முன் வருபவர்களின் உடல் நிலை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே தகுதி இருப்பின் அவர்களிடம் சமாதானம் பெற்று, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிளாஸ்மா சேமிப்பு வங்கியில் அதிகமான பிளாஸ்மாக்களை சேமித்துவைக்க உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது. ரத்த தானம் போல் பிளாஸ்மா தானம் செய்வதால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது எனவும் டீன் சங்கு மணி தெரிவித்துள்ளார்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட இணை நோய்களான சர்க்கரை, இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 19 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதில், 95% பேர் குணமடைந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அதற்குப் பின்னரான சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. அந்த மையத்திற்கு சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் வருவதாகவும், மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம் வருவதாக தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து குணமடைந்து செல்பவர்களுக்கு வேறு ஏதேனும் இணை நோய் பாதிப்பு ஏற்படுகிறதா என்பதை மருத்துவமனை கன்ட்ரோல் ரூம் மூலம் தொடர்ந்து அவர்களுடன் தொலைபேசியில் பேசி அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com