குழந்தைகளை கொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாப்பது குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க சிறப்பு பணிக்குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மூன்றாம் அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படும் நிலையில், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 13 பேர் கொண்ட பணிக்குழுவை அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் எழிலரசி உறுப்பினர் செயலராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள், பாதிக்கப்படும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகள் தொடர்பாக இந்தக் குழு அரசுக்கு ஆலோசனை வழங்க உள்ளது.