”அக்டோபர் மாத இறுதியில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை எட்டக்கூடும்” - வல்லுநர்கள் எச்சரிக்கை

”அக்டோபர் மாத இறுதியில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை எட்டக்கூடும்” - வல்லுநர்கள் எச்சரிக்கை
”அக்டோபர் மாத இறுதியில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை எட்டக்கூடும்” - வல்லுநர்கள் எச்சரிக்கை
Published on

செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் மூன்றாம் அலை வரக்கூடும் என்று வல்லுநர்கள் குழு எச்சரித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்பேரில், தேசிய பேரிடர் மேலாண்மைக்குழு அமைத்த வல்லுநர் குழு, தனது அறிக்கையை பிரதமர் அலுவலகத்தில் அளித்துள்ளது. இதன்படி, 3ஆம் அலையில் குழந்தைகள் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் 7.6 சதவிகிதம் பேர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில், இதேநிலை நீடித்தால், அடுத்த அலையில் தினசரி பாதிப்பே 6 லட்சத்தை எட்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் வரும் மந்தை எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும்வரையில், அடுத்தடுத்த அலைகளை தடுக்க முடியாது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கான்பூர் ஐஐடி வல்லுநர்கள் கணிப்புப்படி, அக்டோபர் மாத இறுதியில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை எட்டக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கும்நிலையில், இந்தியாவில் குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் எதுவும் இல்லாதது பெரும் சவாலாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் 3 ஆவது அலையை எதிர்கொள்ள குழந்தைகளுக்கான படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுவருவதாக மருத்துவத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2015 ல் நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையின்படி, நாட்டில் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கு 82 சதவிகிதம் பற்றாக்குறை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் தினசரி ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை எட்டினால் மட்டுமே மந்தை எதிர்ப்புத்திறன் வளரும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com