கொரோனாவால் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்தார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதுகுறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இதனிடையே கொரோனா அதிகரித்து வருவதால் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் எனவும் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் கொரோனாவால் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், கொரோனாவால் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை எனவும் பீகாரில் தேர்தலின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,000 ஆக இருந்தது, அந்த சூழல் தமிழகத்தில் இல்லை எனவும் தெரிவித்தார்.