கொரோனா தாக்காமல் இருக்க நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் மருத்துவக்குறிப்பினை கூறியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
இது தொடர்பாக வைரமுத்து “ வெற்றிலை ஒன்று வால்மிளகு இரண்டு நகத்தளவு இஞ்சித் துண்டு மூன்றையும் மென்று அதிகாலையில் சீரகத் தண்ணீர் அருந்துகிறேன். நோய் எதிர்ப்பாற்றல் கூட்டும் வழிகளுள் இதுவும் ஒன்று என்று நம்புகிறேன். அருள் கூர்ந்து நீங்களும்...” என தெரிவித்துள்ளார்.