மிகவும் கடுமையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 13 பேரில் 11 பேர் பிளாஸ்மா சிகிச்சை எடுத்துக்கொண்டு பூரணமாக குணமடைந்துள்ளனர் என்று ஹைதராபாத் காந்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
காந்தி மருத்துவமனையின் துறைத்தலைவர் அதுலா வினய் சேகர் பேசுகையில் “ பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலமாக கொரோனா தொற்றினால் தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த 13 நோயாளிகளில் 11 பேர் விரைவாக குணமடைந்துள்ளனர். இந்த நோயாளிகள் அனைவரும் சுவாச பிரச்னைகள் உடையவர்கள். பல்வேறு இணை நோய்களுடன் கொரோனா பாதிப்பில் மூன்றாம் கட்டத்தில் இருந்தவர்கள் இவர்கள். சாதாரணமாக மருந்துகளை எடுத்துக்கொண்டு குணமாகாமல், வெண்டிலேட்டர் வரை செல்லக்கூடிய கொரோனா நோயாளிகளை பிளாஸ்மா தெரபி குணமாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்