இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையை அடுத்த 3-4 நாட்களில் நடத்த பாரத் பயோடெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர, மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை பயன்படுத்த அனுமதி அளித்தது. முதல் மற்றும் இராண்டாம் கட்ட பரிசோதனை முடிவுகள் திருப்திகரமாக இருந்ததால் அவசரத்தேவைக்காக பயன்படுத்தலாம் எனக் கூறியது.
இந்நிலையில் இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனையை அடுத்த 3 -4 நாட்களில் நடத்த பாரத் பயோடெக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.