கொரோனா உச்சத்தில் இருந்தபோது போர்க்களம் போல காட்சியளித்தவை மருத்துவமனைகள்தான். அப்படிப்பட்ட நேரத்தை எப்படி சமாளித்தன மருத்துவமனைகள்? 2ஆம் அலை சற்று ஓய்ந்துள்ள நேரத்தில் , சென்னையின் முக்கிய மருத்துவமனைகளின் முதல்வர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்வதை பார்க்கலாம்.
இதுவரை காணாத கொரோனாவின் உச்சம். ஆக்சிஜனுக்காக மூச்சுத்திணறிய நோயாளிகள். வரிசை கட்டி நின்ற ஆம்புலன்ஸ்கள். ஒரேநாளில் நூற்றுக்கணக்கில் குவிந்த நோயாளிகளால் மருத்துவமனைகள் திணறிக்கொண்டிருந்ததை இதற்கு முன் நாம் கண்டிருக்கமாட்டோம். முதல் அலையைக் காட்டிலும், 2 ஆம் அலையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகம். போர்க்களத்தில் போராடும் வீரர்களைப்போல, இடைவிடாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சென்னையின் முக்கிய மருத்துவமனைகளின் முதல்வர்களும், இயக்குநர்களும், தங்கள் அனுபவங்களை பகிர்கிறார்கள்.
இரண்டாம் அலையின் கோர தாண்டவத்தைப் பார்த்துவிட்டதாலும், முடிந்தவரை சிறப்பாக கையாண்டு விட்டதாலும் கிடைத்திருக்கும் அனுபவம் இனி எத்தனை பெரிய இடரையும் எதிர்கொள்ளும் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளதாக ஒரே குரலில் கூறுகிறார்கள் மருத்துவமனை முதல்வர்கள்.