கொரோனா நோயாளிகளை ஆயுர்வேத சிகிச்சை முறையில் 14 நாட்களில் குணப்படுத்த முடியும் என பதஞ்சலி ஆயுர் வேதா குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும் போது “ நாங்கள் கொரோனாவுக்கு மருந்து கண்டறிவதற்காக விஞ்ஞானிகளை நியமித்திருந்தோம். அவர்கள் தொற்றை ஆராய்ந்து உடலில் கொரோனா பரவுதலை தடுக்கவும், அதனை எதிர்த்து போராடவும் மருந்தை கண்டறிந்துள்ளனர். இந்த மருந்தை நாங்கள் 100 கொரோனா நோயாளிகளிடம் செலுத்தி ஆய்வை மேற்கொண்டோம். இதில் எங்களுக்கு சாதகமான முடிவு கிடைத்துள்ளது.
மருந்தை உட்கொண்ட கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு 5 முதல் 14 நாட்களில் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. நாங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனைகளை மட்டுமே செய்கிறோம். இன்னும் 4 முதல் 5 நாட்களில் இது சம்பந்தமான ஆவணங்கள் சமர்பிக்கப்படும். அந்த வகையில் தற்போது ஆயுர்வேத சிகிச்சை முறையால் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்பதை எங்களால் கூற இயலும்” என்றார்.
இந்தியாவில் 3,08,993 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் 1,54,329 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.