சென்னை வழியாக ஆந்திரா சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான்

சென்னை வழியாக ஆந்திரா சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான்
சென்னை வழியாக ஆந்திரா சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான்
Published on

சென்னை வழியாக ஆந்திரா சென்ற நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கென்யாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்து, பின்னர் திருப்பதிக்கு காரில் சென்ற 39வயது பெண்ணுக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பெண்ணின் குடும்பத்தினர் 6 பேருக்கு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் சோதனையில், அவர்களுக்கு தொற்று இல்லை என உறுதியாகியுள்ளது.

ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடல்நலன் சீராக இருப்பதாக ஆந்திர சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது ஆந்திராவில் ஒமைக்ரான் பாதிப்பு இரண்டாக அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com