தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை தடுக்க, நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகின்றது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், இரண்டாவத நாளாக அவர் மருத்துவ நிபுணர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இன்றும் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது உருமாறிய ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவல் அதிகரித்துவரும் நிலையில், மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. குறிப்பாக, தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடு, நாளை ஜனவரி 6 (நாளை) முதல் அமலுக்கு வருகிறது. அந்த நேரத்தில் மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிகிறது. தொடர்ந்து 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வருகின்றது.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F3168595096732017%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>