கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்ற நிலையில், நாட்டு மக்களிடையே இன்று உரையாற்றிய பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வருவதாக அறிவித்தார். இந்த ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து அடுத்த 21 நாட்களுக்கு எவை செயல்படும் என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியுள்ளது.
அதில் குறிப்பிட்டுள்ள சில தகவல்கள்:
அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்
அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி
உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், மருந்தகங்கள் ஆன்லைன் மூலம் பெறலாம்
ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும்
பெட்ரோல் பங்குகள், சமையல் எரிவாயு நிறுவனங்கள் செயல்பட தடையில்லை
ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், நெடுஞ்சாலையோர கடைகள் செயல்படும்
வங்கிகள், ஏடிஎம்கள், காப்பீடு நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்
பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி
விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது
தொலைத்தொடர்பு, இணையதள சேவை, கேபிள் டிவி நிறுவனங்கள் செயல்படும்
அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் வழக்கம் போல் செயல்படும்
இறுதிச் சடங்கில் 20 பேர் மட்டுமே கலந்துக்கொள்ள வேண்டும்