மும்பையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், கோமாளி போல வேடமணிந்து, குழந்தைகளிடம் முகக்கவசம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது பாராட்டுக்களை குவித்துள்ளது.
அஷோக் குர்மி என்ற சமூக ஆர்வலரான இவர், ஏழைகள் வசிக்கும் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், முகக்கவசம் குறித்து அங்குள்ள குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, கோமாளி போல வேடமணிந்து செல்கிறார். குழந்தைகளுக்கு முகக்கவசத்தை வழங்கும் அவர், அதன் அவசியம் குறித்தும், தனி மனித இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கிறார்.