மேட்டூர்: கருப்பு பூஞ்சை நோயால் பாதித்த கணவரை காப்பாற்ற வீடியோ வெளியிட்ட மனைவி

மேட்டூர்: கருப்பு பூஞ்சை நோயால் பாதித்த கணவரை காப்பாற்ற வீடியோ வெளியிட்ட மனைவி
மேட்டூர்: கருப்பு பூஞ்சை நோயால் பாதித்த கணவரை காப்பாற்ற வீடியோ வெளியிட்ட மனைவி
Published on

மேட்டூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பால் உயிருக்குப் போராடும் கணவரை காப்பாற்றக்கோரி அவரது மனைவி கதறும் வீடியோ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த தனபால் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி செண்பகம், சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், தனது கணவருக்கு கண்களில் ரத்தம் கசிந்து வருவதாகவும், உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவர்கள் அலட்சியம் காட்டி வருவதாகவும் கூறியிருந்தார்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கேட்டபோது, தனபாலுக்கு ஏற்கெனவே கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு இருந்துள்ளதாகவும், அதனை மருத்துவர்களிடம் மறைத்து கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர். இருந்தபோதிலும் உயர் சிகிச்சை அளிப்பதற்காக சேலம் மருத்துவமனைக்கு தனபால் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com