முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடந்த 12ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் 14ஆம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த முதலமைச்சருக்கு, தற்போது தொற்றின் அளவு குறைந்ததாகவும், அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் சில தினங்களுக்கு முன் காவேரி மருத்துவமனையின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்த பின், முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9:45 மணி அளவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையிலிருந்து நேராக தலைமை செயலகம் சென்ற முதலமைச்சர் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பி உள்ளார்.
<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவைச் செயலகக் குழுக் கூட்ட அறையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் இந்திய குடியரசு தலைவருக்கான தேர்தலில் தனது வாக்கினை மாண்புமிகு முதலமைச்சர் <a href="https://twitter.com/mkstalin?ref_src=twsrc%5Etfw">@mkstalin</a> அவர்கள் செலுத்தினார். <a href="https://t.co/As4sP2CfFS">pic.twitter.com/As4sP2CfFS</a></p>— CMOTamilNadu (@CMOTamilnadu) <a href="https://twitter.com/CMOTamilnadu/status/1548904322259243010?ref_src=twsrc%5Etfw">July 18, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
மேற்கொண்டு முதலமைச்சர் அடுத்த ஒரு வார காலம் வரை ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தொடர் மருத்துவ கண்காணிப்பில் முதல்வர் இருப்பார் என காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.