கேரளாவில் குறைந்த புதிய கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை: நிம்மதிப் பெருமூச்சில் மக்கள்

கேரளாவில் குறைந்த புதிய கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை: நிம்மதிப் பெருமூச்சில் மக்கள்
கேரளாவில் குறைந்த புதிய கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை: நிம்மதிப் பெருமூச்சில் மக்கள்
Published on

ஓணம் பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் கேரளாவில் உச்சத்திலிருந்த கொரோனா தொற்று, தற்போது படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதியும் ஆறுதலும் அடைந்துள்ளனர். அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 30), கேரளாவில் 19,622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,17,216 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கேரளாவை பொறுத்தவரை கடந்த ஆண்டு ஆகஸ்ட் வந்த ஓணம் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்ட தளர்களாலும் அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தல், தங்க கடத்தல் தொடர்பான இடைவிடாத போராட்டங்களால் ஆகியவற்றாலும், மே 2021-ல் தினசரி தொற்று 41 ஆயிரத்தை கடந்து பதிவானது. இதையடுத்து வந்த சட்டமன்ற தேர்தல் காரணமாக, அதற்கு பிந்தைய நான்கு மாதங்களில் கொரோனா தொற்று குறையாமலேயே இருந்தது. இந்நிலையில், ஆறுதல் அளிக்கும் விஷயமாக கடந்த சில வாரங்களாக 20 ஆயிரத்திற்கும் கீழே பதிவாகி, தற்போது 13 ஆயிரம் வரை தினசரி தொற்று பதிவானது.

இந்நிலையில், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் ஓணம் பண்டிகைக்காக தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தளர்வுகளில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டதால் மீண்டும் தொற்றுப்பரவல் அதிகமானது. இதனால் கடந்த வாரம் 13 ஆயிரமாக இருந்த தினசரி தொற்று படிப்படியாக 20, 22 ஆயிரமாகி தற்போது தொடர்ந்து மூன்று நாட்களாக 30 ஆயிரம் கடந்து பதிவாகி வந்தது. இந்நிலையில் நேற்று முதன்முறையாக தொற்று பதிவு குறைந்தது. அந்தவகையில் நேற்று 1,51,670 பரிசோதனைக்கு, 29,836 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இன்று 1,17,216 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 19,622 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40,27,030 என்று உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று 132 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 20,673 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மாநிலம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 2,09,493  பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 22,563  பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 37,96,317 பேர் குணமடைந்துள்ளனர்.

டெஸ்ட் பாஸிட்டிவிட்டி சதவீதம் நேற்று 17.85 சதவீதமாக இருந்தது. இன்று அது 16.24 சதவீதமாக குறைந்துள்ளது.

ஓணம் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்ட தலைவர்களால் இந்த ஆண்டு படிப்படியாக நோய் தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நோய் தொற்று குறைந்து வருவது கேரள மக்களுக்கு ஆறுதலையும் நிம்மதியையும் அளித்துள்ளது.

கடந்த ஆண்டு ஓணம் பண்டிகை தளர்வுகளால் கொரோனா தொற்று அதிகரித்திருந்த நிலையில் அதை சற்றும் கவனத்தில் கொள்ளாமல் இந்த ஆண்டும் அதே ஓணம் பண்டிகைக்கு மருத்துவக்குழுவினரின் எச்சரிக்கையையும் மீறி தளர்வுகள் அறிவித்ததற்கு, கேரள அரசிற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

- வி.சி.ரமேஷ் கண்ணன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com