கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிக்கான 2ஆவது தவணை இடைவெளி 3 மாதங்களில் இருந்து 2 மாதங்களாக குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்தியாவில் சில மாநிலங்களிலும் கொரோனா தொற்றுப்பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தும் பணியை வேகப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் 2ஆவது தவணைக்கு 12 முதல் 16 வாரங்களாக உள்ள இடைவெளியை 8 முதல் 12 வாரங்களாக குறைக்க மத்திய அரசுக்கு தேசிய வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. ஒமைக்ரான் வகை கொரோனாவை தடுப்பதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அதனையும் விரைவுபடுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: இதெல்லாம் நம்பாதீங்க.. கொரோனா தொடர்பான 3 தவறான தகவல்களை பட்டியலிட்ட WHO